அடுத்துவரும் மூன்று வாரங்கள் கண்டத்தில்!அடுத்து வரும் மூன்று வாரங்கள் இலங்கை முழுவதும் அபாயம் மிக்கதாக இருக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே  யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 11 காவல்துறையினருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதென, வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஏ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் பின்னரே, 11 பொலிஸாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 20 காவல்துறைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் 3 வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக மக்கள் செயற்பட்ட விதத்தால், நாட்டில் மீண்டும் கொரொனா வேகமாகப் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தொடர்ச்சியான விடுமுறைகளைக் கொண்ட வார இறுதி நாள்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என்பவற்றை ஏற்பாடு செய்வதையும் தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments