ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை மறைந்தார்.


தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தை நேசித்த மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று (01) அதிகாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்

சுகவீனம் காரணமாக  நீண்ட காலமாக ஓய்வில் இருந்த  மன்னார் மறைமாவட்ட ஆயர், யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

1981 ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை மன்னார் மாவட்ட இரண்டாவது ஆயராக கடமை யாற்றி ஓய்வு பெற்று சுகவீனமுற்று யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இவ்வுலகை விட்டு சென்றிருந்தார்.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதிகமான பற்று கொண்ட ஒரு மனிதனாக நின்று அவர் தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதன் 

இலங்கையினுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின்  முன்னால் சென்று மிகத் துணிச்சலோடு ஆதாரத்தோடு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போய் கொல்லப்பட்டார் கள்என்ற செய்தியை வெளிப்படையாக துணிச்சலுடன்  சொன்ன ஒரு மனிதர் .

எதிர்வரும் திங்கட்கிழமை மாலை அவரது இறுதி திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளது.

No comments