3வது பூட்டுதலின் கீழ் பிரான்ஸ் பள்ளிகள் மூடப்படும்


பிரான்சில் கொவிட் தொற்று அதிகரித்து வருவதால் மூன்றாவது முடக்கநிலைக் கட்டுப்பாடுகளுக்கு  அமைவாக நாடு தழுவிய  ரீதியில் பாடசாலைகள் அனைத்தும் அடுத்த மூன்று வாரங்களுக்கு மூடப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்  அறிவித்துள்ளார்.

பாடசாலைகள் மூடப்படுவதால் அடுத்த வாரத்திலிருந்து தொலைநிலைக் கல்வி மூலம் வீட்டிருந்தவாறு வகுப்புகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

கடந்த மாத தொடக்கத்தில் பிரான்சின் சில பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட முடக்கநிலை நடவடிக்கைகள் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றன.

அனைத்து அத்தியாவசிய கடைகளும் சனிக்கிழமை முதல் மூடப்பட உள்ளன.

காரணமின்றி வீட்டிலிருந்து 10 கி.மீ (ஆறு மைல்) க்கு மேல் பயணிக்க தடை விதிக்கப்படும்.

தற்போது பிரான்சில் தீவிர சிகிச்சையில் 5,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments