பிரான்சு Saint-Maurice நகரசபை முன்பாக தமிழினப்படுகொலை ஆதாரங்கள்

இலங்கையில் பூர்வீககுடிகளாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களை அவர்களின் அடையாளங்களை அழித்து

உரிமைகளை பறித்து அடிமைகளாக்கி வைத்திருப்பதற்கு கடந்த 73 ஆண்டுகளாக சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் முயன்று வருகின்றன.

தமது ஏகாதிபத்திய சிந்தனைக்காக பல இலட்சக்கணக்கான தமிழர்களை சிங்களப்படைகள் பலி எடுத்துள்ளன.எனினும் இன்றுவரை சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக தமிழர்கள் உரிமைக்காக போராடிவருகின்றார்கள்.தமக்கு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தால் இழைக்கப்பட்ட கொடுரங்களுக்கு சர்வதேச நீதி கோரி ஐநா சபைவரையும் தமிழர்கள் போராட்டங்களை விரிவுபடுத்தியுள்ளார்கள்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான ஆதாரங்களை சர்வதேச நாடுகளுக்கு அம்பலப்படுத்தி அதன் மூலம் இனப்படுகொலை குற்றவாளிகளை சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்துவதற்காக வேண்டுகோள்களை வைத்து ஈழத்தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது.

அந்த வகையில் இனப்படுகொலை ஆதார ஆவணங்களை வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன இன்று பிரான்சு 55 Rue du Maréchal Leclerc, 94410 Saint-Maurice நகரசபை முன்பாக தமது பரப்புரைகளை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments