முடக்கம் -இராணுவத்தளபதி:இல்லை-மகேசன்!



இலங்கை இராணுவத்தளபதி முடக்க நிலை பற்றி அறிவித்துள்ள நிலையில் அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தேவைக்கு ஏற்றவாறு தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யலாம் எனினும் தற்போதைய நிலையில் அரசானது பாரிய முடக்க நிலை அறிவிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத வண்ணம் ஒரு அசௌகரியத்தை எதிர்கொள்ளாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் 

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றுவரை 1544 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றையதினம் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றுவரை 19 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் நிலமை திருப்திகரமாக இருந்தாலும் அதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் க.மகேசன்; தெரிவித்துள்ளார்.


No comments