வழக்கிற்கு தடை!பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணிக்கு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவினை மீறியதான வழக்கினை நீதவான் நீநிமன்றம் நடாத்த முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால கட்டளை பிறப்பித்துள்ளது.

பேரணிக்கு தடை விதித்த நிலையில் பேரணியில் பங்குகொண்டு நீதிமன்றை அவமதித்;தனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு நாளை கல்முனை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் ஓர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்யும் நியாய ஆதிக்கம் ஒன்று நீதவான் நீதிமன்றிற்கு கிடையாது. ஆகவே கல்முனை நீதவான் நீதிமன்றில் நாளை இடம்பெறவுள்ள வழக்கினை தடை செய்யக்கோரி முன் வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை ஏற்ற நீதிமன்றம் எதிர் வரும் 18ஆம் திகதிவரை இடைக்கால தடை விதித்தது.

வழக்குத் தொடர்பில் கல்முனை நீதவான் நீநிமன்றம் இதற்கு மேல் எந்த உத்தரவும் வழங்க கூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments