யாழில் வயோதிபரைக் கொன்றுவிட்டுக் கொள்ளை!


யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவரைக் கொன்றுவிட்டு கொள்ளையடித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

யாழ்ப்பாணம், தென்மராட்சி மீசாலைப் பிரதேசத்தில் கொள்ளையர்கள் தாக்கியதில் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (12.04.20021) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொள்ளையர்கள் மூவர் முதியவர்கள் தனித்து வசிக்கும் வீட்டிற்குள் நுழைந்துள்ளதுள்ளனர். குறித்த வீட்டில் வசிக்கும் வயோதிப தம்பதியை கட்டி வைத்து, பொருட்கள் இருக்குமிடம் குறித்து சித்திரவதை செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இக் கொடூர சம்பவத்தில் அல்லாரை வீதி மீசாலையை சேர்ந்த 72 வயதுடைய செல்லையா சிவராசா என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபரை கொலை செய்து விட்டு ஒன்றரை இலட்சம் ரூபாவையும், நகைகளையும் கொள்ளை அடித்துக் கொண்டு திருடர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments