இந்திய மீனவர்கள் அனுமதி:பின்வாங்கினார் டக்ளஸ்!


அத்துமீறி எல்லைதாண்டி சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு வழிமுறைகள் பரசீலிக்கப்பட்டு வருகின்றதே தவிர தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஆயினும் யோசனையை சிலர் மிகைப்படுத்தி தவறாகச் சித்தரித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளினாலும் எமது நாட்டிலும் தடைசெய்யப்பட்ட ஒரு தொழில் முறைமையை இந்தியக் கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரம்;; எடுக்கவுள்ள முடிவுகள் பாதிக்கப்படுகின்ற வடக்கு கடற்றொழிலாளர்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகவே இருக்கும் என்றும் அவர்களது விருப்புக்கு மாறானதாக அவை இருக்க மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் வடக்கு கடலில் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கவுள்ளதான டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து பல மட்டங்களிலும் கடும் எதிர்வினைகளை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது


No comments