போலி ஆவணங்கள் தயாரிக்கும் வீடு முற்றுகை! நபர் உடமைகளுடன் கைது!


அம்பாறை மாவட்டம் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியிலுள்ள போலி ஆவணங்கள் தயாரிக்கும வீடு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11.04.2021) காவல்துறையினரால் முற்றுகையிட்டிருந்தனர்.

முற்றுகையின் போது, மடிகளணி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள் என்பனவற்றை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த மோசடியில் ஈடுபட்ட 44 வயதுடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததுடன் ஆவணத்தயாரிப்பதற்கான மடிகணணி, பிறிண்டர், மற்றும் காகித அட்டைகள் என்பனவற்றை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை  நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments