டுபாயிலிருந்து மேலும் 268பேர் திரும்பினர்!

இலங்கைக்கு வெளியிலிருந்து நாடு திரும்ப முடியாத நிலையில் வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 268  பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

டுபாயில் இருந்து விமானங்கள் ஊடாக இன்று காலை இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாடு திரும்பியவர்களில் பெரும்பாளானவர்கள் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றிருந்தவர்கள் என எமது விமான நிலைய அதிகாரிகள்; தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் இராணுவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments