வடக்கு:நாளை முடிவாம்?



இலங்கை முழுவதும் கொரோனா தொற்று உச்சமடைந்துள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நாளை நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் தலைமையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில்; முப்படையினர் கலந்துகொள்ளவுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிறீகாமாட்சி அம்பாள், ஆலயத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் கைதான ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவலை ஏற்படுத்த வழிசமைத்த குற்றச்சாட்டில் ஆலய தலைவர், செயலாளர் ஆகியோர் நேற்றைய தினம் கைது செய்யப்படடிருந்தனர். 

நாட்டில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய 50 பக்தர்களுக்கு மட்டுமே ஆலயத்தில் ஒரே நேரத்தில் வழிபட அனுமதிக்கப்படும் என இலங்கை சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது



No comments