இப்பொழுது தெற்கில் வேட்டை!

 


கடந்த ஏப்ரல் 7 ம் தேதி இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சுயாதீனப்பத்திரிகையாளர் மாலிகா அபேயகூன் ஏப்ரல் 12 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அதன் இலங்கை துணை நிறுவனங்களான ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் என்பவை அவரை உடனடியாக விடுவிக்கக் கோருகின்றன.

ஏப்ரல் 7 ம் தேதி ஐக்கிய சுகாதாரத் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சுகாதாரத் தொழிலாளர்களின் எதிர்ப்பு பேரணியில் அபேயகூன் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு பத்திரிகையாளருக்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

ஏப்ரல் 8 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது , அபேயகூன் தனது சட்டையை அகற்றிவிட்டு, முந்தைய நாள் இரவு மருதானை காவல் நிலையத்தில் தனக்குக் கிடைத்த காயங்கள் மற்றும் தழும்புகளை நீதிபதியிடம் காட்டினார். அவர் போலீஸ் காவலில் இருந்தபோது அவருக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். சிறை மருத்துவமனையில் இருந்து மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பணித்துள்ளதுடன் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி ஆர்வலர்கள் மருதானை பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கம் தங்கள் ஜனநாயக உரிமைகளை மீறுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். எந்தவொரு எதிர்ப்பாளரும் அபேகூனைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.


No comments