யாழ்.நகர் சோபையிழந்தது?


கோவிட் தொற்று பீதியால் இம்முறையும் யாழ். நகர் புத்தாண்டு சோபையிழந்தது.

இம்முறை சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் சோபையிழந்தமையால் வர்த்தகர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக புடவை விற்பனை நிலையங்கள் பல இரண்டு வாரங்களாக மூடபட்டிருந்தன. 


எனினும் கடந்த வாரம் வர்த்தக நிலையங்களை மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்ட போதும் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் அவர்களின் கடைகளைத் திறக்க அனுமதிவில்லை. 

இந்நிலையில் கொரோனா பரவல் அச்சநிலை காரணமாக யாழ். மாநகரில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு புடவை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும் குடாநாட்டில் யாழ்.நகர் மற்றும் திருநெல்வேலி நகர் தவிர்ந்த பகுதிகள் ஓரளவிற்கு புத்தாண்டு பரபரப்பில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments