மூத்த மருத்துவ போராளி அருள் மறைந்தார்!


தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை நேசித்த மற்றுமொரு மருத்துவ போராளி மண்ணை விட்டு பிரிந்துள்ளார்.

விடுதலைப்போராட்டத்தில் சுமார் இரு தசாப்தங்களாக மருத்துவ போராளியாக பணியாற்றிய மருத்துவர் அருள் இன்று மண்ணை விட்டு பிரித்துள்ளார்.

மருத்துவ போராளியான அருள்  என்றழைக்கப்படும் இராசையா யதீந்திரா  போராளிகளினதும் மக்களினதும் இறுதி யுத்தம் வரையாக உயிரைக் காத்த ஒரு மருத்துவன் என நண்பர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

போரின் பின்னான தன் அமைதியான வாழ்க்கை போலவே அமைதியாக அவர் விடைபெற்றுக் கொண்டு விட்டார் என அவருடன் கூட பயணித்த போராளிகள் நிiவுகூர்கின்றனர்.

விபத்தொன்றில் காயமடைந்த மருத்துவர் அருள் மருத்துவ சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவியுள்ளார்.


No comments