வவுனியாவில் சிப்பாய்கள் காயம்!

 


வவுனியாவில் மரங்களை கடத்திச் சென்ற வாகனம் மோதியதில் இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமந்தைப் பகுதி ஏ-9 வீதியூடாக  வவுனியா நோக்கி மரங்களை ஏற்றிசென்ற வாகனத்தினை ஓமந்தையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர்.

இதன்போது, மரக் கடத்தல்காரர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதுடன் அங்கிருந்த இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர்.

இதனால், நீண்ட தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட இராணுவ வீரர்களில் ஒருவர் வீதியில் வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்ததுடன் மற்றொரு சிப்பாயும் காயங்களுக்குள்ளானார்.

இதேவேளை, மரங்களைக் கடத்திச்சென்ற வாகனம் சற்று தூரத்தில் விபத்துக்குள்ளாகி நின்றதையடுத்து வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments