தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம்! ஐவர் கைது!!


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலையில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பகுதிகளில் ஒவ்வொருவருமாக நால்வர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத செயற்பாட்டினை உருவாக்கும் நோக்குடன் குழுக்கள் அமைத்து செயற்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் இன்று மற்றொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

45 அகவையுடைய பாடசாலை வீதிவள்ளிபுனம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்பஸ்தரே இன்று அதிகாலை பயற்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments