இன்று யாழில் 21!

 


யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 702 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.பருத்தித்துறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் மூன்று பேருக்கும் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும் என நால்வருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


No comments