இந்திய படகுகளை தாக்கி அழியுங்கள்?

 


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளை அழித்துவிடுமாறு அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே என்பவர் கோரியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீன்பிடி படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். அவ்வாறு அனுமதிப் பத்திரம் வழங்குவதாக இருந்தால், நாட்டில் கடற்றொழில் அமைச்சர் ஒருவர் இருப்பதில் பலன் உள்ளதா என ரத்ன கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் இராஜதந்திர ரீதியாகக் கையாளப்பட வேண்டியது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு பேணப்படுவது இரண்டு நாடுகளுக்கும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.

ஆயினும் வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் உரிமை இதன் மூலம் மீறப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் அவரின் கூற்றை மீளப்பெற வேண்டும் எனவும் ரத்ன கமகே வலியுறுத்தியுள்ளார்.


No comments