வடமராட்சியில் துப்பாக்கி சூடு!


வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் ஏற்றியவர்கள் மீது இலங்கை காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வடமராட்சி முள்ளிப்பகுதியில் கண்டல்காட்டுப்பகுதி ஊடாக மணல் ஏற்றி வந்தவர்கள் மீது காவல்துறை இன்று காலை துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளது.

காயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் படையினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளிற்கு முன்னதாக இதே பகுதியை அண்மிம்து சட்டவிரோத மண் கடத்தல்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.  


No comments