புத்தாண்டு கொண்டாட்டம்:30பேர் பலி!
இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடந்த 48 மணித்தியாலங்களில் விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 150 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் அதிகளவானவர்கள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என அவர் கூறியுள்ளார்.
நாட்டில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் அதிகளவு விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளன.
14ஆம் திகதி விபத்துக்களில் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15ஆம் திகதியான நேற்று 16 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மட்டும் இரு சிறுவர்கள் உட்பட ஜவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment