முல்லையில் பரிதாபம்!முல்லைத்தீவு குழுழமுனையில்  நேற்று இடம்பெற்ற மின்னல் தாக்குதல் காரணமாக மூன்று விவசாயிகள் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

குறித்த சம்பவத்தின்போது தண்ணீர்முறிப்பைச் சேர்ந்த சகோதரிகள் இருவரது கணவர்களான  சகோதரிகள் இருவர் கணபதிப்பிள்ளை - மயூரன், வயது 33, மற்றும் ஜெகநாதன் யுகந்தன்  ஆகியோரும் குமுழமுனையை முகவரியாக்கொண்ட  , சுஜிந்தன்  ஆகிய மூவருமே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவர்கள் ஆவர்.

முல்லைத்தீவில் நேற்று மாலை முதல் கடும் மழையுடன் கூடிய இடி மின்னல் தாக்கம் காணப்பட்ட சமயம் குமுழமுனையில் வயலில் பணியாற்றிய சமயத் மாலை மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

வயல் வேலையில் குறித்த மூவருமே இருந்தமையினால் உடனடியாக தகவல் வீட்டாருக்கு கிட்டாத நிலையில் வயலிற்கு சென்றவர்களை தேடிச் சென்றவர்களே இந்த துயரச் சம்பவத்தை கண்டறிந்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு  நீதிபதி இன்று காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதும் உடலம்   வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

No comments