நினைவு கூருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் - ஜெபரட்ணம் அடிகளார்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல  யுத்தத்தின் போது

உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளைய தினம் அனுஸ்டிக்கப்பட்டஉள்ள நிலையில் அவர் இதi தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின் போது வடபகுதியில் ஆலயங்கள் மீது குண்டு வீசப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அந்த வேளையிலே தென்பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை.இப்படியான ஒரு நிலையில் தென் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு நாங்கள் ஏன் நினைவு நிகழ்வுகளை  செய்ய வேண்டும்? என்று ஒரு கேள்வி பலரிடையே நிச்சயமாக இருக்கின்றது.

ஆனால் சரியான ஒரு காரியத்தை ஒருவர் செய்யவில்லை என்பதற்காக, சரியான ஒரு காரியத்தை நாங்கள் செய்யாது இருக்கக்கூடாது. 

இந்த வேளையிலே அரசாங்கத்திடம் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம். இந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்வதற்கு, அனுமதி வழங்கி அதற்கான பாதுகாப்புகளை வழங்குகின்றார்கள்; .

அதேபோல தமிழ் மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் 30 ஆண்டுகளாக அனுபவித்த போரின் போது, இறந்து போன ஆயிரக்கணக்கான மக்கள், இறந்துபோன இளைஞர், யுவதிகளையும் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி தரவேண்டும். பாதுகாப்பு தர வேண்டுமெனவும்  யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments