இராணுவ தளபதி டக்ளஸிடம் உதவி?கிளிநொச்சியில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்த நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன தன்னுடைய மகனை தொடர்ந்தும் தேடிவருகின்ற மூதாட்டி ஒருவர் அவ்வமைப்பின் தளபதியை சந்தித்து உதவி கோரியுள்ளார்.

தற்போதைய அரசின் அமைச்சரும் முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் இராணுவ தளபதியுமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தனக்கான பரிகாரத்தினை பெற்றுத் தருமாறு கேட்டுக்காண்டதாக டக்ளஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.

1990ம் ஆண்டில் இந்திய படையினருடன் டக்ளஸ் உள்ளிட்ட மேல்மட்ட தலைவர்கள் தப்பித்தோடிய நிலையில் எஞ்சியோர் அகப்பட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments