யாழில் மரணங்கள் உச்சத்தில்!கொரோனா நோய் தொற்று காரணமாக யாழ்.குடாநாட்டில் மரணங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதன் தொடரச்சியாக சாவகச்சேரியை தொடர்ந்து கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளார். 


கல்வியங்காடு , வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த 77 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார். 


யாழ்ப்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் சுகாதார விதிமுறைகளின் கீழ் மின் தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments