லண்டனில் பெண் கொலை! வீதியில் இறங்கிப் போராடிய மக்கள்!

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் கொலை செய்யப்பட்ட பெண் நினைவாகவும் நீதியான விசாரணையை வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி

கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இப்போராட்டம் பெண்களின் பாதுகாப்பு குறித்த சர்வதேச உரையாடலைத் தூண்டியது.

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் சந்தைப்படுத்துதல் பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றி வந்தவர் சாரா எவரார்டு (வயது 33).  கடந்த 3ஆம் திகதி தெற்கு லண்டனில் கிளாபம் பகுதியில் அமைந்துள்ள அவரது நண்பரின் வீட்டிலிருந்து நடந்து செல்லும்போது காணாமல் போனார்.

அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டதில் கடந்த புதன்கிழமை உயிரிழந்த அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.  

நேற்று சனிக்கிழ கிளாபம் கொமன் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியாக திரண்டு சாராவின் நினைவாக மலரஞ்சலி செலுத்தி சென்றனர்.

அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டோர் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியுள்ளனர் எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

போராட்டத்தில் கலந்துகொண்டோருக்கும் காவல்துறையினருக்கும் வாய்த்தக்கம் சச்சரவுகளால் பதற்றம் நிலவியது. போராட்டக்காரர்களை காவல்துறையினர் இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர்.



No comments