காலிஸ்தான் அமைப்பிடம் இருந்து 10 ஆயிரம் டொலர்களை பெற்றது ஐ.நா


காலிஸ்தான் ஆதரவு அமைப்பிடம் இருந்து பத்தாயிரம் டொலர்களை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீக்கியர்களுக்குத் தனிக் காலிஸ்தான் நாடு உருவாக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் என்னும் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த குர்பத்வத் சிங் பன்னூன் என்பவரைப் பயங்கரவாதி என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அவர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கு இணைய வழியில் பத்தாயிரம் டாலரை நன்கொடையாக அளித்துள்ளதை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது.

ஐ.நா.வின் கொள்கைகள், நோக்கங்களுக்கு எதிரானவை எனப் பட்டியலிட்ட இயக்கங்கள் தவிர மற்றவர்களிடம் இருந்து நிதி கிடைக்கும்போது மறுக்க முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

No comments