சுதந்திரக்கட்சி தனித்தாம்?


நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலில்  சுதந்திரக்கட்சி தனித்துப் போட்டியிடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலும் இவ்விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments