மருத்துவம் தோற்றது:மரணம் வென்றது!பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதன்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். அவரது மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

’இயற்கை’  திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ஜனநாதன் அதன் பின்னர் ’பேராண்மை’ ’புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ உள்பட சில படங்களை இயக்கினார். அவர் தற்போது விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன் நடித்த ’லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் திடீரென இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலகம் சோகத்தில் மூழ்கி உள்ளது என்பதும் அவரது மறைவு திரையுலகின் மிகப் பெரிய இழப்பு என்று இரங்கல் தெரிவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments