வெலிஓயா போனார் சுரேன்?

 


முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு (வெலிஓயா) பிரதேசத்திற்கு இன்று (மார்ச் 14) மாலை விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் , அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு வெலி ஓயா அஹெட்டுவெவ பிரிவேனாவில் இடம்பெற்றது. 

இந்தச் சந்திப்பின்போது வெலிஓயா பிரதேசத்தின் தற்போதை நிலைமைகள், மக்கள் முகம்கொடுக்கும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள்,  தர்மத்தின் ஊடாக சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கான நீதியினை நிலை நாட்டுவதே தனது முதன்மையாக குறிக்கோளாக காணப்படுவதாக இதன்போது தெரிவித்தார். 

No comments