வட்டக்கச்சியில் தீ வைப்பு! பெண்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்!

வட்டக்கச்சியில் கடந்த 10 ஆம் திகதி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த அருளம்பலம் துஷ்யந்தன் மீது கத்திக்குத்து நடத்திய நபரின் வீடு மீது தீ

வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் துஷ்யந்தனின் மனைவி மற்றும் சகோதரி மீது காவல்துறையினர் தாக்கதல் நடத்தியுள்ளனர்.

சந்தேக நபர்களின் உறவினர்கள் காவல்துறையினரின் உதவியுடன் வீ்ட்டுக்குச் சென்று பாெருட்களை எடுத்துச் செல்ல முற்பட்ட போது கத்தி குத்துக்கு இலக்காகி இறந்த துஷ்யந்தனின் மனைவி மற்றும் தங்கைகள் மற்றும் ஊர் காரர்களுடன் நீதி கேட்கச் சென்றபோது வாய்த்தக்கதமா மாறி பின்னர் காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கானவாகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments