ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே! வேட்புமனு தாக்கல் செய்தர் சீமான்;

 


தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகிறது. தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றுக்கொண்டிருகிறது. இன்று திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், கமல், சீமான், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சீமான் தனது வேட்பு மனுவில் தமக்கு அசையும் சொத்து ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துக்கள் ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். கூடவே தன் மனைவிக்கு அசையும் சொத்து ரூ.63,25,031 மற்றும் அசையா சொத்து ரூ.25,30,000 உள்ளதாகம் அவர் குறிப்பிட்டிருக்கார். தனக்குக் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.65,500 மட்டுமே வருமானம் வந்துள்ளதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சென்ற 2019-20 ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

No comments