செய்தியாளர் மீது சானிடைசர் தெளித்த தாய்லாந்துப் பிரதமர்

தாய்லாந்துப் பிரதமர் செய்தியாளர்கள் மீதுசானிடைசர் தெளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் எரிச்சலுடன் பதிலளித்துக் கொண்டிருந்த பிரதமர் பிரயுத் சான் ஓச்சா, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கேள்விக்கு கோபப்பட்டு தன் அருகில் இருந்த சானிடைசரை எடுத்து செய்தியாளர்கள் மீது தெளித்துள்ளார்.

தன்னிடம் மேலும் அடுத்தடுத்து கேள்வி கேட்க முயன்ற செய்தியாளர்கள் மீது அவர் சானிடைசரை ஸ்பிரே போல அடித்துக் கொண்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



No comments