சான்விச் வாங்க 130 கிலோ மீற்றர் உலங்கு வானூர்த்தியில் பயணம்


பிரித்தானியாவில்  ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளை மீறி, தனக்கு பிடித்த சான்ட்விச்சை வாங்க  பிரித்தானியாவில் 130 கிலோ மீட்டர் உலங்கு வானூர்த்தியில் வந்து சென்றதாக, சான்ட்விச்சை விற்ற பிரித்தானிய உணவு நிறுவனம் ஒன்று காணொளியை வெளியிட்டுள்ளது.

இக்காணொளியை லட்சக்கணக்கில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சான்ட்விச் வாங்க வந்தாலும், ஊரடங்கை மீறுவது குற்றமல்லவா எனத் தெரிவித்துள்ள பிபிசி செய்தி நிறுவனம், இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

கொரோனா ஊரடங்கின் போது தமக்கு மிகவும் விருப்பமான மெக்டொனால்ட் பேர்கரை வாங்க பிரிட்டனில் ஒரு பெண் 100 கிலோ மீட்டர் தூரம் வண்டி ஓட்டி சென்று, பின்னர் அதற்காக அபராதம் செலுத்தினார்  என்பது நினைவூட்டத்தக்கது.

No comments