கிளிநொச்சி:தாய்,தந்தை மீது கொலை குற்றச்சாட்டு!

 


கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகள் சகிதம் தற்nகொலை செய்ய முயன்ற தாயார் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தாயார் ஒருவர் மூன்று பிள்ளைகளுடன்; வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி கிணற்றினுள் தற்கொலைக்கு முயன்றிருந்தார்.

கிணற்றுக்குள் குதித்த தாயார் கிணற்றின் படிக்கற்களை பிடித்ததினால் உயிர் தப்பிக்கொண்டார். ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்திசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.ஏனைய குழந்தைகளை தேடும் நடவடிக்கை கடற்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு இரண்டு சிறார்களின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

ஒன்றரை வயதுடைய கிருபாகரன் டேனேஸ், ஐந்து வயதுடைய கிருபாகரன் அக்சயா, எட்டு வயதுடைய கிருபாகரன் கிருத்திகா என்ற சிறார்களே பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கடன் தொல்லை,குடிபோதைக்கு அடிமையான கணவனின் சித்திரவதை காரணமாக தற்கொலைக்கு முயன்ற நிலையில்  தாயார் மீது இலங்கை காவல்துறையால் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கணவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


No comments