மன்னாரில்மீண்டும் ஆமி தலையிடி!



மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியால் மக்கள், அரச அதிகாரிகள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என் செல்வம் அடைக்கலநாதன் தெரியப்படுத்தினார்.

அதாவது, சோதனைச் சாவடிகள் உள்ளமை தொடர்பாக எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை. ஆனால், குறித்த சோதனைச் சாவடி அமைந்துள்ள பகுதியே ஒரு பிரச்சினையாக உள்ளது.

மக்களின் பொழுது போக்கு இடமாகக் காணப்பட்ட குறித்த இடத்தில் இராணுவச் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இதானால், மக்கள் அவ்விடத்துக்குச் செல்லமுடியாத நிலை காணப்படுகிறது.


மேலும், அரச கடமைகளுக்காகச் செல்லும் பணியாளர்கள் குறித்த சோதனைச் சாவடியில் நிறுத்தப்படுகின்றனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் கழற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.


இதனால், அவர்கள் உரிய நேரத்திற்கு கடமைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



No comments