யாழ்ப்பாணத்திற்கு சத்திய சோதனை!


கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் செல்வோருக்கு (பயணிகளுக்கு) பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.

பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து, வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், பாதுகாப்பு கருதி அங்கிருந்து வவுனியாவுக்கு செல்வோருக்கு குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments