யேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

யேர்மனியில் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கான நாடுகடத்தும் நடவடிக்கைக்கு எதிராக நேற்று ஏதிலிகளைச் சிறைவைத்திருக்கும் யேர்மனி தென்மாநிலம்

போட்சையும் நகரத்தில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக தமிழ்மக்களால் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற்றது.

கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்தபடி இருநூறுக்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கோசங்களை எழுப்பி தங்கள் வலியினை வெளிப்படுத்தினர். தற்போதுள்ள நிலமையில் சிறிலங்காவை நம்பி எமது உறவுகளைக் கையளிக்கவேண்டாம் என்றும் சிறிலங்கா அரசு ஓர் பயங்கரவாத அரசு என்றும் சிறிலங்கா ஓர் சித்திரவதைக் கூடம் என்றும் 2009 வரை தமிழ் மக்களைச் சித்திரவதை செய்து கொண்றொளித்தவர் சகல அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதியாக இருக்கும் இக் கொலைக்களத்திற்கு எம் உறவுகளை அனுப்பவேண்டாம் என்று மிக உருக்கமாகக் கேட்டுக் கொண்டனர்.

இவ்வேளையில் உள்ளே நாடுகடத்துவதற்காகப் பிடிபட்டிருப்பவர்கள் இரும்புக்கம்பிகளுக்கூடாக தம் கைகளை அசைத்தும் குரல்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்த உறவுகளுக்கு தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

இதேவேளை இப்படி ஓர் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி மத்தியமாநிலத்தில் படபோன் நகரில் Büren எனும் இடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கு முன்பாகவும் சமநேரத்தில் நடைபெறுகின்றது.அத்தோடு நாளை திங்கட்கிழமை பேர்லின் நகரத்தில் உள்ள உள்நாட்டு அமைச்சிற்கு முன்பாகவும் மத்தியமாநிலத்தில் உள்ள டுசில்டோர்ப்   நாடாளுமன்றத்திற்கு முன்பாகவும் நடைபெறயிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments