அமெரிக்கா அழுத்த வேண்டுமாம்!இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலத்தள பக்கத்தை மேற்கோற்காட்டி ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஊடக சுதந்திரம் என்பது எந்தவொரு ஜனநாயகத்தினதும் அடிப்படைக் கொள்கையாகுமெனவும், குறித்த பதிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான ஆதரவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மீள் பரிசீலனை செய்யவேண்டுமெனவும் அந்த நாட்டு வெளியுறவுக்குழு வலியுறுத்தியுள்ளது.


No comments