முன்னணி தலைவர்களது ஆர்ப்பாட்டம் யாழில்!

இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கெதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இன்று யாழில் ஆர்ப்பாட்ட போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகம் நுழைவாயிலை மறித்து கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் மகளிர்பிரிவு தலைவி உள்ளிட்ட பத்து பேர் வரையில் ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்தனர்.

இலங்கை அரசு அரச காணிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரை வார்க்கும் நடவடிக்கையாகவே இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு முற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ்பிறேமச்சந்திரன் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தார்.அத்துடன் பளை பகுதியில் சிங்கள வர்த்தகர்களிற்கு பெருமளவு காணிகளை தாரை வார்க்க அரசு முற்பட்டுள்ளமையினையும் அறியதந்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


No comments