மாணவர் ஒன்றியம் முன்வந்து ஆதரவு!


கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூரில் ஸ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்து முன்னெடுக்கப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமது பூரண ஆதரவை வழங்குவதாக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் பா.உஜாந்தன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற குறித்த போராட்டத்திற்கு அனைத்து பொதுமக்களும் தமது ஆதரவினை வழங்கி ஸ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

No comments