முரண்டுபிடிக்கும் இலங்கை போக்குவரத்து சபை!


யாழ்.நகர் முடக்க நிலையினை சந்தித்துள்ள நிலையில் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் முடக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்காலிகமாக தற்போதைய பேருந்து நிலையத்தை புதிய பேருந்து இடமாற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் புதிய பேருந்து நிலையத்துக்கு போகமுடியாது என இலங்கை போக்குவரத்து சபை முரண்டுபிடிக்க தொடங்கியுள்ளது.

தேவையெனில் பாதுகாப்புக்காக 10 நாட்கள் பேருந்து சேவையினை இடை நிறுத்துகிறோம் என இலங்கை போக்குவரத்து சபையினர்  சுகாதார அதிகாரிகளுடன் முரண்டுபிடித்துவருகின்றனர்

இதனால் படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.No comments