தெற்கில் கைது வேட்டை உக்கிரம்!மக்கள் ஜக்கிய சக்திகளை உள்ளே தள்ளும் கோத்தா அரசின் நடவடிக்கை உக்கிரமடைந்துள்ளது.ஏற்கனவே ரஞ்சன் ராமநாயக்க உள்ளே தள்ளப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

அதன் ஒரு அங்கமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு   கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிபெண்டர் வாகனத்தில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் ஹிருணிகா, நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த வழக்கு விசாரணைகள் ஜுன் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

No comments