இலங்கை காவல்துறையை திருப்பி அனுப்பிய வேலன் சுவாமிகள்!எந்தவொரு முன்னறிவுப்புமின்றி வாக்குமூலம் பெறச்சென்ற இலங்கை காவல்துறையினை திருப்பியனுப்பியுள்ளார் வேலன் சுவாமிகள். 

வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் தடையுத்தரவை மீறி மக்கள் பேரெழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் இலங்கை காவல்துறையினர் வாக்கு மூலங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில்; இன்றைய தினம்  நல்லூரிலுள்ள வேலன் சுவாமிகளிடம் வாக்கு மூலம் பெற இலங்கை காவல்துறையினர் சென்றிருந்தனர்.

எனினும் போதிய முன்னறிவிப்பின்மை மற்றும் தனது சட்டத்தரணிகளது ஆலோசனையினை பெற்றே வாக்குமூலமளிக்க முடியுமென தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார் வேலன் சுவாமிகள்.


No comments