யாழில் விசாரணை:கொழும்பில் பாராட்டு!


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக பேரணி நடத்தியதாக வேலன் சுவாமிகளிற்கு அரசு காவல்துறையினை விசாரணைக்கு அனுப்ப மகா சிவராத்திரியை முன்னிட்டு மகிந்தவை சந்தித்து ஆசீர்வதித்துள்ளது இன்னொரு குழு.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மீள்பதிப்புச் செய்யப்பட்ட பன்னிரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்து கலைக் களஞ்சியத்தின் ஆரம்ப பிரதிகள் மகிந்தவினால் இந்து மதகுருமார்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கலாநிதி சுரேன் ராகவன், அங்கஜன் ராமநாதன், எம்.ரமேஸ்வரன் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோருக்கும் இந்து கலைக் களஞ்சியத்தின் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கையின் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் மகிந்த ஆற்றும் தனித்துவமான சேவைக்கு இதன்போது இந்து மதகுருமார் பாராட்டு தெரிவித்தனர்.


No comments