டைனமற்குச்சிகளுடன் ஒருவர் கைது!


மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் கல் உடைப்பதற்கான கல்குவாரி  அனுமதிப்பத்திர காலவதியான நிலையில் அதற்கு பயன்படுத்தும்  வெடிபொருட்களை வைத்திருந்த ஒருவரை இன்று சனிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் வெடிபொருட்களை மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

166 டைனமற்குச்சிகள், 10 யார் கொண்ட சேவா நூல் 20, 20 டெக்கினேற்றுக்களை மீட்டு வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

No comments