வவுனியா வைத்தியசாலையிலும் கொரோனாவவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும்  தாதி ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் அவருடன் நெருங்கிப் பழகிய மற்றொரு தாதிக்கும் தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் குறித்த இருவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனையினை முன்னெடுப்பதற்காக  மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை  குறித்த தாதியர்களுடன் தொடர்புகளை பேணிய சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,இருவரையும் கிளிநொச்சி மற்றும் கொழும்பில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments