வீடு மீது இனம்தெரியாத கும்பல் தாக்குதல்!

யாழ்.கஸ்தூரியார் வீதியிலுள்ள அமைந்துள்ள வீடொன்றின் மீதேதாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது. 

நேற்று நள்ளிரவு குறித்த வீட்டிற்கு இரண்டிற்கும் மேற்பட்ட உந்துருளிகளில் வந்த இனந்தெரியாத கும்பலொன்றே இத் தாக்குதல் சம்பவத்தை நடாத்தியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

தாக்குதலின் போது வீட்டின் முன்னால் கண்ணாடிகள் அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த பொருட்களும் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக யாழ் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments