நாயாற்றில் மூவர் உயிர் தப்பினர்! ஒருவர் பலி!
முல்லைத்தீவு நாயாற்று கடல் நீர் ஏரியில் இன்று ( 07)காலை குளிக்க சென்றவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நால்வர் குளித்துக்கொண்டு இருந்த நிலையில் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் மூவர் கரை ஏறியுள்ளார்கள் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவரை தேடும் பணி சுமார் மூன்று மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட போது கடலில் இருந்து காணாமல் போனவர் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வவுனியாவினை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளதுடன் உடலம் மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment