உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! நீதி கோரிப் போராட்டம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இன்று நாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மற்றும் சுமார் 500 பேர் காயமடைந்த ஈஸ்டர் ஞாயிறு படுகொலையின் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இப்போராட்டத்திற்கு எதிக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி மற்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமயிலான தேசிய மக்கள் சக்தி என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.
கருப்பு நிற ஆடை அணிந்து இன்றைய ஞாயிறு ஆராதனைகளில் கத்தோலிக்க மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினத்தினை கருப்பு ஞாயிறாக அனுஷ்ட்டிக்குமாறு கொழும்பு பேராயர் இல்லத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
Post a Comment