ஆசாத்திடம் துப்பாக்கி?மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரது காரில் இருந்து வெளிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி மற்றும் ரவை என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குற்றப் புலனாய்வுப் பிரவினர் அவரது காரை சோதனை செய்த போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், கொள்ளுப்பிட்டி பதியில் வைத்து அசாத் சாலி நேற்று(16) கைதுசெய்யப்பட்டிருந்தார். 

No comments